Test mode - முதல் இதழ் வெளியாகியுள்ளது — .
இதழ் 1 அட்டை — தீர்ப்புகள்

Issue 1 · July 2026

முதல் சொல்

உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டி நிறைவடைந்திருக்கிறது, நாம் இந்த “Book மக்கள்” தொடங்க சரியான நேரம் தான். இந்த உலகக்கோப்பை அது ஒரு விளையாட்டுப் போட்டி என்ற எல்லையைத் தாண்டி, பல பொதுவான உரையாடல்களையும் கேள்விகளையும் மீண்டும் நம் முன் கொண்டுவந்திருக்கிறது.

ரெட்கார்ட் விஷயத்தில் அவரே பெருமையாகச் வெளிப்படுதிய ட்ரம்ப் தலையீடு, அர்ஜெண்டைனா இறுதிப்போட்டியில் ஜெயிக்கூடாது என விரும்பிய இந்திய ரசிகர்கள் என சில உதாரணங்களை மட்டும் எடுத்துக்கொண்டால். ஒரு நாட்டுத் தலைவரின் தலையீடு, கால்பந்தில் ஆர்வமில்லாதவர்கள்கூட ஒரு நாட்டின் வெற்றியையோ தோல்வியையோ விரும்பி உணர்ச்சிப்பூர்வமாக எதிர்வினையாற்றியது—இவை அனைத்தும் தனித்தனியான நிகழ்வுகளாகத் தோன்றலாம். ஆனால் இவற்றின் பின்னால் அதிகாரம், அடையாளம், தேசியவாதம், ஊடகப் பிம்பங்கள், அறம், கூட்டுமனநிலை போன்ற பல கேள்விகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

இலக்கியமும் கலைகளும் இப்படிப்பட்ட கேள்விகளைத் தொடர்ந்து எதிர்கொண்டு வந்தவையே. ஒரு நிகழ்வின் மேற்பரப்பை மட்டுமல்ல, அதன் அடியில் இயங்கும் மனித அனுபவங்களையும் முரண்களையும் ஆராய்வதே அவற்றின் இயல்பு.

இந்த இதழ் எங்களின் முதல் முயற்சி. சமகால நிகழ்வுகளிலிருந்து இலக்கியம், சிந்தனை, கலை, அரசியல் என பல தளங்களில் உரையாடல்களைத் தொடங்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இந்த இதழின் ஒவ்வொரு பக்கமும் உங்கள் நேரத்திற்கும் சிந்தனைக்கும் மதிப்பளிக்கும் என நம்புகிறோம்.

உங்கள் கவனத்தையும் கருத்துக்களையும் அன்புடன் வரவேற்கிறோம்.

Browse the full issue →

In this issue

திரைமொழி

சுரேஷ் பாபு

Draft -மரணத்துக்கு ஜிகுனா ஒட்டும் சினிமா

திரையில் ஒரு மரணம்; தியேட்டரை விட்டு வெளியே வரும்போது மனசில் ஒரு நிறைவு. அந்த மரணம் எப்படி திருப்தியாக மாறுகிறது? இரண்டு பரபரப்பான படங்கள், ஒரு பார்வை

11 min read

விளையாட்டு

சுரேஷ் பாபு

நடுவரின் விசில் முடிவு செய்வது விளையாட்டையா வீரரையா

இறுதிப் போட்டி தொடங்கும் முன்பே அர்ஜென்டினா தோற்க வேண்டும் என்று தீர்மானித்த ஒரு நண்பரோடு செய்த உரையாடலும் அதன் பின்னரான சிந்தனைகளும்

16 min read